2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வரவேற்ற தென்னகோன், செந்தில் தொண்டமான்

Freelancer   / 2024 மே 18 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
 
இந்த வரவேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமானும்  இராஜாங்க அமைச்சருடன் வரவேற்றார்.

மே 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் குருதேவ், மே 19ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவுள்ள ‘ஏகமுத்துவ: இசை, தியானம் மற்றும் ஞானத்தின் மாலை’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .