Editorial / 2017 மே 31 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு, காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால், கரையோரப் பிரேதசங்களில் வாழும் மக்களும் மீனவர்களும், அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரையும் மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாட்டின் ஏனைய கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago