2021 ஜூன் 19, சனிக்கிழமை

சக்தி தொலைக்காட்சி தாக்குதல்;16 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள  சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது  இடம்பெற்ற தாக்குதலில் கைதுசெய்யப்பட்ட 16 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இனந்தெரியாத குழுவினர் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது தாக்குதலை நடத்தியிருந்தனர்.

அனைத்து சாட்சியங்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இனந்தெரியாத குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி  தலைமையகத்தின் ஊழியர்கள் கற்களால் வீசி பதில் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதனையடுத்து, குறித்த குழுவிலுள்ள ஒரு சிலர் தப்பியோடியுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .