2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சதிகளின் மூலம் எனது வெற்றிக்கு தடை விதிக்க ஆளும் கட்சியினர் முயற்சி - மனோ

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

கண்டி மாவட்டத்தில் தன்னை தோல்வியடையச்செய்வதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலவிதமான சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவார் எனக்கருதப்பட்ட மனோ கணேசன் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

கண்டி மாவட்டத்தில் இதுவரை ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லை என்ற காரணத்தினால் தாம் போட்டியிட முன் வரவேண்டிய நிலை ஏற்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தின்  மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக முன்னணியில் நின்று தான் செயற்பட்டமையும் ஆளும் கட்சியினரின் சதி முயற்சிகளுக்கு ஒரு காரணம் என்றும் மனோ கணேசன் கூறினார்.

தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த நாள் முதல் தொடர்ச்சியாக மனோ கணேசனின் ஆதரவாளர்களுக்கு எதிரான தாக்குதல்களும்,வன்முறைகளும் அரசாங்க தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் மனோ கணேசனின் நிலை குறித்து தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.

தமது வெற்றியில் இன்னும் தாம் நம்பிக்கை வைத்துள்ளதாக மனோகணேசன் பதிலளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .