Freelancer / 2024 ஜூன் 17 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது, முன்னர் கொள்ளுப்பிட்டியில் வசித்த குறித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பொலிஸ் சோதனையின் போது, மற்றொரு ஜோடி குறித்த வீட்டில் இருந்து, பாலியல் காட்சியில் நேரடியாக ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு ஜோடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். R
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago