2026 மார்ச் 21, சனிக்கிழமை

சார்க் பொதுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Freelancer   / 2024 ஜூன் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு சார்க் நாடுகளின் ஆதரவை பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சார்க் கலாச்சார மையத்தை மொடர்ன் ஆர்டிற்காக மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .