2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் கேபி கைது;கோத்தபாய ராஜபக்ஸ

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறந்த புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியன காரணமாகவே விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன் இணையதளங்களின் ஊடாக பயங்கரவாத நடவடிக்கைகளை பரப்பியிருந்தார் எனவும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் உதவியுடன் இந்தக் கைது இடம்பெற்றதாகவும் கோத்தபாய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம்  தென்கிழக்கு ஆசியா நாட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட கேபியிடம் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .