Editorial / 2026 ஜனவரி 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
அளவில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளனர்
கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை முகாமின் டி.ஆர்.எல். அதுக்கோரல அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர்க்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதி பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்
இதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 04 ஊழியர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டது
அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் எனும் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகள் செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
14 minute ago
22 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
29 minute ago
38 minute ago