Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.சதிஸ் / 2017 மே 26 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை, ஆல்டி கீழ்பிரிவு தோட்டத்தில் உயிரிழந்த, மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் எனவே, சிறுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், பொகவந்தலாவை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி தோட்டத்தைச் உபேந்திரன் சுபா என்ற சிறுமி, உடல்முழுதும் காயங்களுடன் பொகவந்தலாவை வைத்தியசாலையில் இன்றுக் காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உடல் முழுதும், சிகரெட்டினால் சுட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் அவரது கைகள் மற்றும் கால்களில் எரிகாயங்கள் ஆங்காங்கே காணப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட இச்சிறுமி, உடல்நலக்குறைப்பாடு காரணமாக, ஏற்கனவே பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளதாகவும் ஆனால், அப்போது சிறுமியின் உடலில் இவ்வாறான காயங்கள் காணப்படவில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் எனவே, அவரது சடலத்தை, உடற்கூற்ற பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சுயநினைவற்ற நிலையில் கிடந்த சிறுமியை, சிறுமியின் பாட்டன் உறவுமுறையுடைய ஒருவரே, வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.
தனக்கு சுகயீனம் காரணமாக, சிறுமியை பாட்டனாருடன் அனுப்பி வைத்ததாக சிறுமியின் தாய் பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார்.
சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தொழில்புரிந்து வருவதாகவும் சிறுமி, தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago