2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சாவகச்சேரி வர்த்தகரின் மகனின் பூதவுடல் இன்று நல்லடக்கம்

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சாவகச்சேரியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட  பாடசாலை மாணவனின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவரது சடலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி மாயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் மூன்று சந்தேக நபர்களின் ஒருவரின் வளவுக்குள் இருந்தே மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ் சாவகச்சேரி வர்த்தகரின் மகனான  குறித்த மாணவன் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த  14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .