2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சவூதியை நிந்தித்தால் 20 வருடங்கள் சிறை

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பணியாளர்கள், சவூதி அரசாங்கத்துக்கு எதிராகவோ, அந்நாட்டு பிரஜைகளுக்கு எதிராகவோ, போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை கண்டுப்பிடிக்கப்பட்டால், அவருக்கு 5 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று, சவூதி அரசாங்கம், தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு ​வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. 

அதுமட்டுமன்றி, ஒரு மில்லியன் சவூதி றியாலை தண்டமாக செலுத்தவேண்டி வரும் என்றும் பணியகம் அறிவித்துள்ளது. சவூதி அரசாங்கம், அந்நாட்டு பொலிஸாரின் ஊடாக, சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்துள்ளதாகவும், பணியகம் அறிவித்துள்ளது.  

சவூதி அரேபியாவில் தான் பணிபுரியும் வீட்டின் உரிமையாளர், தன்னிடமிருந்து சிறுநீரகம் கேட்பதாக குற்றம் சுமத்தியிருந்த தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த இந்திரா காந்தி என்ற பெண், நேற்று (31) நாடு திரும்பினார். 

அந்தப் பெண், இலங்கைக்கு திரும்பும் வரையிலும், றியாத்தில் உள்ள தூதரகத்தின் பாதுகாப்பான வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஒருமாதச் சம்பளம் மற்றும் விமான டிக்கெட் ஆகியவற்றை, அப்பெண் வேலைச்செய்த வீட்டு உரிமையாளரே பெற்று கொடுத்துள்ளார்.  

அந்த பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து, தூரகத்திலிருந்து சுமார் 475 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள, அப்பெண் வேலைச்செய்த வீட்டை கண்டுப்பிடித்த தூதரக அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பில் அங்குள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். 

இதனையடுத்தே, அந்தப் பெண், அவ்வீட்டிலிருந்து சவூதி பொலிஸாரினால் மீட்கப்பட்டார். அத்துடன், வீட்டு எஜமானும் பொலிஸுக்கு அழைக்கப்பட்டார்.  

அதனையடுத்து, அந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்த போது, குறித்த பெண், இலங்கைக்கு செல்லவேண்டும் என்பதால் இவ்வாறான போலியான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, அப்பெண்ணின் சார்பில் தூதரக அதிகாரிகள் மன்னிப்பு கோரியதுடன் அப்பெண்ணையும் விடுவித்துள்ளனர். 

சவூதி அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில், சவூதி வைத்துள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படுமாயின், மேற்குறிப்பிட்டவாறு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டம் அறவிடப்படும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .