2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஜனநாயக மக்கள் முன்னணி-அரசியல் உயர்பீடம் நாளை சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் அரசியல் உயர்பீடம்  நாளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கட்சி தனியாக பிரிந்து செல்வது அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இன்று டெயிலிமிரர் இணையத்தளத்திடம்  அவர் கூறினார்.

ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமையினால் ஐக்கிய தேசிய முன்னணிக்கும், தமது கட்சிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி நேற்று தெரிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .