2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் ஆரோக்கியத்தில் ரணில் விக்கிரமசிங்ஹ அக்கறை

Super User   / 2010 மார்ச் 31 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது தனிப்பட்ட வைத்தியர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியளிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், சுகாதாரசேவை பணிப்பாளரினால் பரிந்துரை செய்யப்படும் மற்றுமொரு வைத்தியரும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பார்வையிடுதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் நேற்று விடுத்திருக்கும் அறிக்கையில் அவர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கியம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி விசேடமாக கவனம் செலுத்துவதாகக் கூறிய ரணில் விக்கிரமசிங்ஹ,    ஏனெனில், 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் அவரது உடல் ஆரோக்கியம் பாதிப்படைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .