2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜெனரல் பொன்சேகாவின் பேட்டி பிரதியை கடத்திய திட்டத்தின் சூத்திரதாரி ஜே.வி.பி-டளஸ் அழகப்பெரும

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் எழுதப்பட்ட பேட்டியின் பிரதியை கடற்படை தலைமையகத்திலிருந்து கடத்திச்சென்று பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய சூத்திரதாரி மக்கள் விடுதலை முன்னணியே என அரசாங்கப் பேச்சாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான டளஸ் அழகப்பெரும குற்றஞ்சாட்டியுள்ளார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது,  ஜெனரல் சரத் பொன்சேகாவை மக்கள் விடுதலை முன்னணி விற்றதாகவும் கூறிய அமைச்சர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவை விற்பதற்கு அவர்கள் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரிட்டனை தளமாகக்கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பின் ஆங்கில மறுவடிவமே எனவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .