Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் சிறுநீரக நோய் தடுப்புக்காக, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ஆற்றும் பணியை பாராட்டி, சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பு, ஜனாதிபதிக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கொழும்பு கோல்பேஸ் ஹொட்டலில், நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பின் தலைவி, பேராசிரியர் அடீரா லெவினால் இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
“இலங்கையிலுள்ள ஆதரவற்ற சிறுநீரக நோயாளர்களின் நலன்களுக்காக, அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்றிட்டத்துக்கு, இந்த விருது பெரும் பலமாகும் என்பதனால், அனைத்து இலங்கை மக்கள் சார்பிலும் சிறுநீரக நோய் தொடர்பான மருத்துவ நிபுணர்களின் சர்வதேச அமைப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டிலுள்ள ஆதரவற்ற ஏழை மக்கள், இரண்டு தசாப்தங்களுக்கு கூடுதலான காலமாக முகங்கொடுத்துள்ள இந்த பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்பதற்காக, நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அப்பயணத்துக்கு அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025