2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

தப்பிச் செல்ல முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2024 ஜூலை 05 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டு மோட்டார் வாகனமொன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட நபர் மீது அத்துருகிரிய பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக அத்துருகிரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (04) இரவு முச்சக்கர வண்டியில் பிலியந்தலை பகுதிக்கு சென்றுள்ளது.

இதன்போது, போதைப்பொருளுடன்  ஒருவர் அங்கு வந்துள்ளதாக தமக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாரின் முச்சக்கரவண்டியை மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .