2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நெதர்லாந்தில் விடுதலைப் புலி சந்தேகநபர்கள் கைது

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்தில் ஏழு விடுதலைப் புலி சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதன் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதேவேளை,   கணனிகள் மற்றும் தொலைபேசிகள் உள்ளீட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் நெதர்லாந்தின் பல்வேறு தமிழ் அமைப்புக்களின் தலைவர் ஒருவரும் அடங்குவதாக நீதி அமைச்சு தெரிவித்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .