Editorial / 2021 மே 04 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள கொவிட்-19 நிலைமையின் காரணமாக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு அதன் செயற்பாட்டு நேரத்தை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுப்படுத்துகின்றது.
எதிர்வரும் வாரங்களில், கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள், அவசரமான / உண்மையான தேவைகளை உடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மரணங்கள் சார்ந்த விடயங்கள், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சான்றிதழ்களுக்கு சான்றளித்தல் ஆகியன தவிர்ந்த கொன்சியூலர் சேவைகள் கட்டாயமான முன் நியமனத்தின் அடிப்படையில் மாத்திரம் வழங்கப்படும்.
முன் நியமனங்களை மேற்கொள்வதற்காக 011 2335942, 011 2338836 மற்றும் 011 2338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
30 Oct 2025
30 Oct 2025