2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்

Freelancer   / 2024 மார்ச் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்குக் காணி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர்,  படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் இருந்து  59 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படும் அதேநேரம்  கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்ப் பகுதியில் 105 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X