2021 ஜூன் 21, திங்கட்கிழமை

நுவரெலியா மாவட்ட வாக்குகளை மீள் கணக்கெடுப்பு செய்யுமாறு கோரி சதாசிவம் மனுத் தாக்கல்

Super User   / 2010 மே 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் நுவரெலியா மாவட்ட வாக்குகளை மீள் கணக்கெடுப்பு செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம் மற்றும் உதயகுமார் ஆகியோரே தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட வாக்குகள் எண்ணும் நடவடிக்கையின்போது குளறுபடிகள் இடம்பெற்றிருந்தன. இதனால், வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே தாங்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சதாசிவம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள உதய குமார் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .