Freelancer / 2024 ஜூன் 17 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. என்னைப் பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..
உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சனைகளை தீராப் பிரச்சனைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன்.
இவர்கள் எல்லோரையும் உருளைக் கிழங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது போன்று ஒன்றாக கட்டி வைத்திருந்தாலும் இன்றைக்கு பிரபாகரன் இல்லாத சூழலில் கட்டு கழன்டு உள்ளதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம் ஒற்றுமை எங்கே இருக்கிறது. பலவருடமாக இப்படி கட்டி வைத்து என்ன கிடைத்தது. அழிவை கட்டுப்படுத்த முடிந்ததா? அல்லலது முன்னேற்றம் ஏதும் வந்ததா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்ப தேர்தல் வருகிறபடியால் மீண்டும் அந்த என்றும் பற்றி பேசுகின்றனர்.
எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதை கூறினோமோ அதனையே இப்போதும் கூறுகிறோம். ஆக, சொல்வதை செய்வதும் செய்வதை சொல்வதும் தான் நான்.
எனவே, எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.
16 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
38 minute ago