2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

பயோ பபுளை மீறிய மூவரிடமும் விசாரணை

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது  உயிர்க்குமிழி (பயோ பபுள்) விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மூவரையும் ஐவர் அடங்கிய ஒழுக்காற்றுக் குழு முன்னிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (29) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரே அழைக்கப்பட்டுள்ளனர்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நிமல் திஸாநாயக்க தலைமையிலான சிறப்பு ஒழுக்காற்றுக் குழுவினால், இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் விசாரணை இடம்பெறவுள்ளது.

இவர்கள் மூவரும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டர்ஹமில் உள்ள வீதிகளில் சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .