2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பிரகீத் எக்நெலிகொடவை கண்டுபிடிக்குமாறு கோரி இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் காணாமல்ப்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை தேடிக்கண்டுபிடித்து விடுவிக்குமாறு இன்று நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் பாரியார் மற்றும் அவரது பிள்ளைகள் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஊடகவியலாளரான பிரகீத் எக்நெலிகொட கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .