2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பேரியல் அஷ்ரப் அரசியல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட உறுதி

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நாடளுமன்றத் தேர்தலில் தன்னால் வெற்றியடைய முடியாத நிலை ஏற்பட்ட போதும், அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடவிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்  தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் வெளிநாட்டு உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுசம்பந்தமாக தமிழ்மிரர் இணையத்தளம் அவரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த அவர், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவி எதனையும் தான் அரசிடம் கோரவில்லையென்றும்
இது சம்பந்தமாக தனக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பொதுதேர்தலில் மக்கள் தன்னை தெரிவு செய்யாத போதிலும் கூட அவர்களை விட்டு ஒதுங்கியிருக்க தான் தயாரில்லை என்றும், தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றவிருப்பதாகவும் பேரியல் அஷ்ரப் குறிப்பிட்டார்.(R.A)  Comments - 0

 • nuah Wednesday, 28 April 2010 09:55 PM

  கம்பளையில் காதர் ஹாஜியார் அரசியலில் இருந்து விலகினால் இவருக்கு அங்கே அரசியல் புரிய இடம் இருக்கிறது.

  Reply : 0       0

  srikant Thursday, 29 April 2010 09:34 PM

  கம்பளை தான் பிரதமரின் தொகுதியும், அங்கே போட்டி கடுமை! இவர் கல்முனையிலே இருக்கட்டும். பிறந்த இடத்தை விட புகுந்த இடமே பெண்ணுக்கு பெருமை தரும்.

  Reply : 0       0

  leez Monday, 26 April 2010 07:44 PM

  எம்பியாக, மந்திரியாக இருந்து ஆற்றாத சேவையா இப்போ ஆற்றப் போறாரு.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .