2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கொடுப்பனவுகள் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் வழங்கப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் புதிய பெற்றோலிய வளத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் சுசில் பிரேமஜயந்த இடைநிறுத்திவைத்துள்ளார்.

அனைத்துக் கொடுப்பனவுகளையும் கணக்காய்வு செய்வதற்கான நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார்.

தற்போதிருக்கும் நிர்வாகத்தில் குறைகள் காணப்படுவதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு, இலங்கை மின்சார சபை 55 பில்லியன் ரூபா வழங்க வேண்டியிருப்பதாகவும் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .