2021 ஜூன் 14, திங்கட்கிழமை

பிள்ளையானின் பாதுகாப்பு வாபஸ்

Super User   / 2010 பெப்ரவரி 26 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் இராணுவப் பாதுகாப்பு உடனடியாக வாபஸ்பெறப்பட்டுள்ளது.

இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் எதுவும் தெரியவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வட்டாரத் தகவல்கள் டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தங்களது பிரதேசத்திலுள்ள பொஸ்மா அதிபரிடம் தெரிவிக்கவிருப்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் அல்லாது, தனித்துப் போட்டியிடவிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தீர்மானித்திருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி  முதன்முதலில் வடபகுதியில் போட்டியிட்டியிடுவதற்கு கடந்த வாரம் தீர்மானித்திருந்த அதேவேளை,  யாழ் குடாநாட்டில் தமது வெற்றியையும் உறுதிப்படுத்தியிருந்தது.

எதிர்க்கட்சிகளிடமிருந்து தாங்கள் இடையூறுகளை எதிர்நோக்கியிருந்ததாகவும் மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

வடபகுதியில் மோதல் ஏற்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும், எனினும், எந்தவித சவாலுக்கும் தாம் தயார் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  Comments - 0

  • honestian Friday, 26 February 2010 05:17 PM

    good.......he spoil the many of Tamil people life,he should punished by god

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .