Freelancer / 2024 மார்ச் 08 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் என்றார். (a)
1 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago