Freelancer / 2024 ஜூலை 07 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக் கிழமை (07) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்தார்.
தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியது.
இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (a)
16 minute ago
29 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
31 minute ago
1 hours ago