2021 மே 13, வியாழக்கிழமை

மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்த நடன ஆசிரியர்

Princiya Dixci   / 2016 மார்ச் 28 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணை, பிரபல நடன ஆசிரியரான குலசிறி புதுவத்த அடித்தார் என செய்யப்பட்ட முறைப்பாட்டை மஹரகம பொலிஸார் விசாரித்துள்ளனர். 

33 வயதான இந்தப் பெண், கடந்த 10 வருடங்களாக இவரிடம் நடனம் பயின்றுள்ளார். 

இது தொடர்பாக நடன ஆசிரியரிடம், வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளதாக மஹரகமப் பொலிஸார் கூறினர். 

பொலிஸார், இந்த விடயத்தை நுகேகொடை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்ற போது நீதிமன்றம் இந்த வழக்கை சமரசம் செய்ய தற்போது மத்தியஸ்த சபைக்குப் பாரப்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .