2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வீதியில் இறந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்

J.A. George   / 2021 மே 04 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா குரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 42). 

இவர் கடந்த சில தினங்களாக சந்திரகலா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்த நிலையில் நேற்று சந்திரகலா சிந்தாமணியில் இருந்து குரதஹள்ளி கிராமத்திற்கு வந்திருந்தார். 

அப்போது அவர் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். 

அப்போது அதை பார்த்த அந்த ஊர் மக்கள், ஒருவேளை அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற பயத்தால் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. 

சிறிதுநேரத்திலேயே சந்திரகலா இறந்து விட்டார். இதையடுத்து பெண்ணின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல எவரும் உதவி செய்ய முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. 

பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த பொலிஸார் அந்த பெண்ணின் உடலை மீட்டு மண் அள்ளும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அங்குள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .