2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஹிலரி கிளின்டனால் ஜான்சிலா மஜீத் விருது வழங்கி கௌரவிப்பு

Super User   / 2010 மார்ச் 11 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி  கிளின்டன் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீத் என்பவருக்கு நேற்று விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வு வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க முதற் பெண்மணி மிச்சேல் ஒபமா கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஜான்சிலா மஜீத் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காக சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது. 

சர்வதேச பெண்களுக்கான உயர் விருது வழங்கும் 10 பேரைக் கொண்ட பட்டியலில் ஜான்சிலா மஜீத் என்பவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .