2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஏனைய மக்களும் விரைவில் மீள்குடியேற்றப்படுவர்:தொண்டமான்

Super User   / 2009 ஒக்டோபர் 30 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த ஒரு லட்சத்த்து என்பத்தாறாயிரம்  தமிழ் மக்கள் மழைக்காலத்தில் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என இளைஞர் வலுவூட்டல்,ச்மூக,பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்  பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுகையில் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்குமமைச்சர் தொண்டமான் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் சந்தித்துப்பேசினார்.

இதனைத்தொடர்ந்து தமிழக பத்திரிகையாளர்களின் மாநாட்டிலும் அமைச்சர் தொண்டமான் கலந்து கொண்டார்.

ஐநா அகதிகள் ஆணையாளர் அலுவலகத்தின் சான்றிதழ் கிடைக்கப்பெற்றவர்களே மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.ஐநா அலுவலகம் இருவகையான சான்றிதழ்களை வழங்குகின்றது.இந்த அடிப்படையில் இதுவரையில் சுமார் 81 ஆயிரம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஏன் இங்கு போவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தொண்டமான் கலைஞர் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அதுவும் ஒரு வெளிநாட்டு ஊடகம் தான் என்றும் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .