2021 ஜூன் 14, திங்கட்கிழமை

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு ரூ.120 மில்லியன் ஒதுக்க கருணாநிதி முடிவு

Super User   / 2009 நவம்பர் 02 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளின் புனர் வாழ்வு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசாங்கம் இந்திய நாணயப்பெறுமதியில் 12 கோடி ரூபாவை ஒதுக்கவுள்ளது.

மாநில அமைச்சர்கள் உடனடியாக தமிழ் நாடு பூராவுமுள்ள 115 அகதி முகாம்களுக்கும் விஜயம்செய்து எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

உயர் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தை தொடர்ந்து பேசிய கலைஞர் கருணாநிதி  மக்கள் அனைவரும் தமிழர்களாக மதிக்கப்பட வேண்டுமே தவிர அகதிகளாக கணிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .