2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஆஸி.கிறிஸ்மஸ் தீவில் இலங்கை-ஆப்கன் அகதிகள் மோதல்;விசாரணை ஆரம்பம்

Super User   / 2009 நவம்பர் 23 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் இடம்பெற்ற இலங்கை,ஆப்கன் நாடுகளைச்சேர்ந்த கைதிகளுக்கிடையிலான மோதல் குறித்து ஆஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அரசியல் புகலிடம் கோரி தஞம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான்,இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 


கடந்த சனிக்கிழமை இரவு இவர்களுக்கிடையில் மோதல் ஆரம்பமானது.இரு தரப்பிலும் சுமார் 150 பேர்வரை மரக்கிளைகள்,துடைப்பம் கட்டைகள்,ஸ்னூக்கர் தடிகள் ஆகியவற்றினால் மோதிக்கொண்டுள்ளனர்.சுமார் அரை மணி நேரத்திற்குள் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தனர்.

காயமடைந்த கைதிகளில் 37 பேருக்கு கிறிஸ்மஸ் தீவில் உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது.எலும்புகள் உடைந்த நிலையில் காணப்பட்ட மூன்று பேர் பேர்த் முருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.


ஆப்கன்,இலங்கை கைதிகள் அனைவரும் தற்போது வெவ்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலிய சமஷ்டி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .