2021 ஜூன் 16, புதன்கிழமை

உயர்மட்ட அரசாங்க தூதுக்குழுவினர் இந்தியா பயணம்

Super User   / 2009 டிசெம்பர் 10 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்றுபேர் கொண்ட உயர்மட்ட அரசாங்க  தூதுக்குழுவினர் நேற்றிரவு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரே இந்தியாவுக்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கையின் சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கு இறுதித் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவேண்டுமென அண்மையில் ராஜ்ய சபாவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, மூன்றுபேர் கொண்ட உயர்மட்ட அரசாங்க  தூதுக்குழுவினர் நேற்றிரவு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளனர்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .