2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தலின் பின் அரசியல் தீர்வு:-இலங்கையிடம் இந்தியா உறுதி

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல்த் தீர்வு முன்வைக்கப்படுமென இந்தியா சென்றிருக்கும் உயர்மட்ட அரசாங்கத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்தியா சென்றிருந்த உயர்மட்ட அரசாங்க தூதுக்குழுவினரான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில் மீள்குடியேற்றப்படுவார்களென உயர்மட்ட அரசாங்கத் தூதுக்குழுவினர் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த பசில் ராஜபக்ஸ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான கலந்துரையாடல் சிறந்த முறையில் அமைந்திருந்ததெனவும் கூறினார்.

நலன்புரி நிலையங்களிருக்கும் அனைத்து மக்களுக்கும்    ஜனநாயக உரிமையுள்ளதென்பதுடன், எதிர்வரும் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

ஜாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவிருப்பதாகவும் பசில் ராஜபக்ஸ இதன்போது தெரிவித்தார்.

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .