2021 ஜூன் 16, புதன்கிழமை

பிரபாகரன் பெற்றோரிடமிருந்து பணம் பெறமாட்டேன்:மஹிந்த ராஜபக்ஸ

Super User   / 2009 டிசெம்பர் 20 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரிடமிருந்து தனது அரசாங்கம் பணம் எதனையும் பெற்றுக்கொள்ளமாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறினார்.

இந்த நிலையில், தனது அரசாங்கம் நாட்டிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தனது அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதுடன்,  இதனாலேயே பொதுமக்களின் முன்பு தனக்கு வரமுடிந்திருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .