2021 ஜூன் 17, வியாழக்கிழமை

லாப் காஸ் விலை திடீர் குறைப்பு;அரசு அறிவிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் காஸ் சிலின்டரொன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கவிருப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி  12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் காஸ் சிலின்டரொன்றின் விலை 1421.00 ரூபாவாகும்.

இந்த விலைக் குறைப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து  நடைமுறைக்கு வருமெனவும் அரசாங்கம் தெரிவித்தது. எனினும், செல் காஸின் விலையில் மாற்றமில்லையெனவும்    தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், லங்கா இந்தியன் எண்னெய்க்  கூட்டுத்தாபனமும் நேற்றிரவு நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலையை 15  ரூபாவால் குறைத்துள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .