2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க த.தே.கூ தீர்மானம்

Super User   / 2010 ஜனவரி 05 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு சரத் பொன்சேகாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று நண்பகல் சரத் பொன்சேகாவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும் சரத் பொன்சேகாவின் அலுவலகம் குறிப்பிட்டது.

இந்த நிலையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்  வழங்குவதற்கான துரித நடவக்கை எடுக்கப்படுமென்பது தொடர்பானஆவணமொன்றை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் சரத் பொன்சேகா சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன், சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செயப்பட்டு ஒரு மாதகாலத்திற்குள் விடுதலைப் போராளிகள் உட்பட தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் வழக்கு விசாரணை தொடரப்படும் அல்லது விடுவிக்கப்படுவார்களென தமிழ்த்   தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை, முன்னால் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுமென சரத் பொன்சேகா உறுதியளித்திருப்பதாக பி.பி.சி செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .