2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு ஐ.நா ஆணைக்குழு விரைவில் நியமனம்

Super User   / 2010 ஜனவரி 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான நிபுணர்கள் ஆணையாளர் குழுவொன்றை  நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய  ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசக்கி, பான்கீமூன்  இவ்வாறு அறிவித்திருப்பதாகக் கூறினார்.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேயச் சட்டங்கள் மீறல்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பில்  விசாரணைகளை நடத்துவதற்காகவே இலங்கைக்கான நிபுணர்கள் ஆணையாளர் குழுவொன்றை  நியமிப்பது தொடர்பில் பான்கீமூன்  கவனம் செலுத்தி வருவதாகவும் மார்ட்டின் நெசக்கி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .