2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

2025 ஆம் ஆண்டில் புதிதாக பதிவான பெரும்பாலான நோயாளிகள் ஆண்கள் என தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மட்டும் 200 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட அதிக பட்ச எண்ணிக்கையாகும்.

2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் மற்றும்ஜூன்) மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய நோயாளிகளில், 20 ஆண்களும் ஒரு பெண்ணும் (15-24) வயதுக்கு உட்பட்டவர்கள்,மற்றவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

மேலும்,2025 ஆம் ஆண்டில் பதிவான ஆண்-பெண் எச்.ஐ.வி தொற்றுகளின் விகிதம் 7.6 முதல் 1 வரை உள்ளனர் இந்த ஆண்டு இதுவரை, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான 23 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டில், 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானஎச்.ஐ.வி பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

2009 முதல்,இலங்கையில் மொத்தம் 6,759 எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகி உள்ளனர், இதில் 5,366 ஆண்கள் மற்றும் 1,573 பெண்கள் அடங்குவர். அதிகரித்து வரும் போக்கிற்கு மத்தியில், தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்,ஆணுறைகளின் பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு(PEP) உள்ளிட்ட எச்.ஐ.வி/எஸ்.டி.ஐ தடுப்பு கல்வியை பள்ளி பாடத்திட்டங்களில் ஒருங்கிணைக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இந்த திட்டம் மதிப்பாய்வு மற்றும் விமர்சனத்தில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X