2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கையில் அதிகரித்துவரும் தேர்தல் வன்முறை குறித்து ஐ.நா-அமெ. அரசு கவலை

Super User   / 2010 ஜனவரி 13 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடத்துமாறு அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற வன்முறைச்சம்பவத்தை அடுத்தே ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் இவ்வாறு தெரிவித்தது.

தங்காலையில் நேற்று  ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ்ஸின் மீது  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டிருந்ததுடன்,  8 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .