2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

'மயோன்' முஸ்தபாவிற்கு எதிராக லஞ்ச ஊழல் முறைப்பாடு

Super User   / 2010 ஜனவரி 18 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸம்மில், பிரதி உயர் கல்வி அமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான முஹம்மத் மயோன் முஸ்தபாவிற்கு  எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முஹம்மத் முஸம்மில் தனது சட்டத்தரணி ஊடாக நேற்றிரவு முறைப்பாடு செய்திருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவைத் திரட்டுவதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர்  தனக்கு பணம் வழங்க முன்வந்ததாக முஹம்மத் முஸம்மில் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேவேளை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முஹம்மத் முஸம்மிலுக்கு எதிராக இன்று  முறைப்பாடு செய்யவிருப்பதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .