2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

புலிகளின் பிளவுக்கு ரணில் காரணம் அல்ல-கருணா

Super User   / 2010 ஜனவரி 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லையென தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். 

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த கருணா  என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து  விலகுவதற்கான முடிவை தானே எடுத்ததாகவும்  குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின்னர்  ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பியினரால் தான் நல்ல மனிதர் என்று கூறி வரவேற்கப்பட்டதாகவும், எனினும், தற்போது  அவர்கள் தன்னை துரோகியாகவும், கொலையாளியாகவும் காட்டுவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமலிருக்க செய்வதாகவும் கருணா குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 500 பொலிஸாரும், அரந்தலாவையில் பௌத்தமத குழுவினரும் கொல்லப்படுவதற்கு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை கருணா நிராகரித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா  பிளவுபடுவதற்கு தான் காரணமில்லை என ஐரோப்பியாவை தளமாகக்கொண்டியங்கும் தமிழ் தொலைக்காட்சியொன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க   அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .