2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யாழ் குடாநாட்டில் குண்டுவெடிப்பு

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் இன்று காலை நான்கு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் குண்டு சத்தங்கள் கேட்டதாகவும்,  எனினும், எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவிலை எனவும் பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் குறித்தொரு இடத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டதாகவும்,  எனினும், எந்தவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்டத்திற்கான அமைப்பாளரின் வீட்டின் மீது இன்று  காலை கைக்குண்டு வீசப்பட்டதாக  தேர்தல் வன்முறைகளை அவதானிக்கும் நிலையம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .