2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வவுனியா முகாம் தமிழ் மக்கள் திட்டமிட்டு வாக்களிக்கமுடியாத நிலை-விஜித்த ஹேரத்

Super User   / 2010 ஜனவரி 26 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மெனிக்பாம் முகாமிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்கள் திடீரென காணாமல்போயுள்ளதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதே அரசாங்கத்தின் திட்டமென்றும் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், முகாம் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதற்காக சென்றபோதே தான் வவுனியா பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டதாகவும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடமாகாணத்தில் சுதந்திரமான தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் குழுவின் பேச்சாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .