2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை விவகாரம்;மேனன் -கருணாநிதி பேச்சு

Super User   / 2010 பெப்ரவரி 01 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய விடயங்கள்  தொடர்பில் தமிழக முதல்வர்  மு.கருணாநிதியும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் நேற்று கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்,  தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன்,  சகல தரப்பினருக்கும் திருப்தியளிக்கின்ற வகையில்  அதிகாரப் பரவலாக்க ஏற்பாடு அமையவேண்டும் எனவும் சிவ்சங்கர் மேனன் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .