2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஐ.நா - இலங்கை அரசு பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2010 பெப்ரவரி 09 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இன்று ஜெனீவாவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்  சரத் பொன்சேகாவினால்  முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுத் தொடர்பில் விளக்கமளிக்கமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவநீதன்பிள்ளையை சந்திப்பதற்காக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர்  மொஹான் பீரிஸ் ஆகியோர் ஜெனீவாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றிருப்பதாக மனித உரிமைகள் அமைச்சு டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளது.

அத்துடன், சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுத் தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகரை மஹிந்த சமரசிங்க, மொஹான் பிரீஸ் ஆகியோர்  சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும்  மனித உரிமைகள் அமைச்சு  குறிப்பிட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள், அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் ஜெனரல் சரத் பொன்சேகா ஆங்கிலப்  பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .