2021 ஜூன் 16, புதன்கிழமை

கனடாவிலுள்ள ஸ்ரார் வெப் சார்பு உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

Super User   / 2010 பெப்ரவரி 22 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவிலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக ஸ்ரார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவிலுள்ள உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக அந்த இணையதளம் குறிப்பிட்டது.

இலங்கையிலுள்ள உதயன் பத்திரிகைக்கும், கனடாவிலுள்ள உதயன் பத்திரிகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் ஸ்ரார் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவிலுள்ள உதயன் பத்திரிகையின் ஆசிரியர் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .