2021 ஜூன் 19, சனிக்கிழமை

வெளிநாடு செல்லாதிருக்குமாறு அரசாங்க எம்.பிகளுக்கு உத்தரவு

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அஜந்த குமார அகலகட)

செப்டெம்பர் 15 ஆம் திகதிவரை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அரசாங்கத் தரப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியலமைப்பு சீர்திருத்த யோசனைகளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளமையே இதற்கான காரணம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் கட்சித் தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதம அமைப்பாளரால் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கக்கூடிய காலம், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அங்கத்தவர்கள் நியமனம், 13 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழான மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பலப்படுத்தல் ஆகியன முதல் கட்டத்தில் கருத்திற்கொள்ளப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .